அப்பா அம்மா வீட்டில் இல்ல...
- பாட்டு உருவான கதை
- பாட்டு உருவான கதை
அப்பா அம்மா ரெண்டு பேரும் கூட்டாளி சாவுக்குப் போயிட்டாங்க. போயிட்டு வர குறைஞ்சது ரெண்டு மூனு மணி நேரமாவது ஆகும். லில்லுக்கு வீட்டுல தனியா இருக்க ஒரே போர். என்ன பன்றதுன்னே தெரியல. நெட் முன்னுக்குப் போய் உட்கார்ந்தாள். யாரும் ஆன்லைன்ல இல்ல. மறுபடியும் கடுப்பு. திடீரென ஓர் இளிச்ச வாயன் ஆன்லைன்ல வந்தான். பேரு வில்லு. அவன் யாருன்னே சரியா ஞாபகம் இல்ல. சும்மா அவனுக்கு தண்ணி காட்ட ப்ளான் போட்டாள்.
பசங்க ஆவல தூண்டி வேடிக்கை பார்ப்பதே இந்த பொண்ணுங்க வேலை. ஹேட்போனை காதிலே மாட்டினாள், லில்லு வில்லுவை வாய்ஸ் கான்பிரன்சுக்கு கூப்பிட்டாள், பாவம் அவனும் சம்மதிச்சு வந்தான்...
அப்போ... அப்போ.. அப்போ... பாட்டாவே பேசிக்கிட்டாங்க...
முன்குறிப்பு : பச்சை நிற எழுத்துரு லில்லு பேசியது, நீல நிற எழுத்துரு வில்லு பேசியது. எஸ்ஜே சூர்யா மாதிரி நாங்க கலர்லயே கதைய சொல்லுவுவோம். அ... ஆ...
ஏய்... டேடி மம்மி வீட்டில் இல்ல
-அதனால என்னா? வீட்டுல மத்தவங்கல்லாம் இல்லையா? இல்ல மேல அனுப்பிட்டியா?
தடை போட யாரும் இல்ல
- அப்படியே போட்டுட்டாலும் நீங்க அடங்கி ஒடங்கி நடந்துப்பீங்கலாக்கும், மேல சொல்லு.
விளையாடுவோமா புள்ள வில்லாலா
- ஓ.. ஐயம் ரெடி..., என்ன விளையாட்டு?
ஏய்.. மைதானம் தேவையில்ல
- கம்பியூட்டர் கேமா?
அம்ப்பையரும் தேவையில்ல
- அது யாரு? உன் பழைய பாய்பிரண்டா?
யாருக்கும் தோல்வி இல்ல வில்லாலா
-அப்போ எதுக்கு விளையாடனுமாம்?
ஏய் கேளேண்டா மாமு,
-யக்கா சொல்லுக்கா
இது இன்னோரு கேமு
-இன்னும் ஒன்னுக்கூட ஆடல, அதுக்குள்ள இன்னொன்னா
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
-தெரியாம வெள்ளாண்டா நீ ஏமாத்திடுவியே... அசுக்கு புசுக்கு
விளையாட்டு ரூலு, நீ மீறாட்டி ஃபூலு
-இப்போ எவன் ரூல் பிரகாரம் விளையாடுறான்? எல்லாத்திலயும் தான் அரசியல் இருக்கே...
எல்லைகள் தாண்டு அதுதாண்டா கோலு
-எது தாய்லாந்து எல்லையா, இல்ல சிங்கப்பூர் எல்லையா?
டேடி மம்மி, டேடி மம்மி
-எது, அதுக்குள்ள சாவுக்குப் போயிட்டு வந்திட்டாங்களா?
டேடி மம்மி வீட்டில் இல்ல
-ஓ... நல்ல வேளை... அப்புறம்
தடை போட யாரும் இல்ல
-இதையே எத்தன வாட்டி சொல்லுவ?
விளையாடுவோமா புள்ள வில்லாலா
-சரி வா, விளையாடாட்டி இதையேத்தான் கேட்டு கழுத்த அறுப்ப போல...
ஹ்ம்ம்... டேக்சிகாரன் தான் நான் ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல் இளிச்சானே
-சிரிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பேச்ச கொற... பேச்ச கொற...
ஓஹோ பஸ்சில் ஏறித்தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு ஓரம் நின்னானே
-அந்த சீட்டுத்தான் தாராளமா இருக்கும் உன் சைசுக்கு.
ஏய்... அளவான உடம்புக்காரி
-எது நானா?
ஏய்... அளவில்லா கொழுப்புக்காரி...
-ஏய்..!
ஏய்.. அளவான உடம்புக்காரி
-120 கிலோ இருப்பேன், பிரச்சனை இல்லியா?
அளவில்லா கொழுப்புக்காரி
- ரொம்ப புகழ்றீங்க
அப்போ... அப்போ.. அப்போ... பாட்டாவே பேசிக்கிட்டாங்க...
முன்குறிப்பு : பச்சை நிற எழுத்துரு லில்லு பேசியது, நீல நிற எழுத்துரு வில்லு பேசியது. எஸ்ஜே சூர்யா மாதிரி நாங்க கலர்லயே கதைய சொல்லுவுவோம். அ... ஆ...
ஏய்... டேடி மம்மி வீட்டில் இல்ல
-அதனால என்னா? வீட்டுல மத்தவங்கல்லாம் இல்லையா? இல்ல மேல அனுப்பிட்டியா?
தடை போட யாரும் இல்ல
- அப்படியே போட்டுட்டாலும் நீங்க அடங்கி ஒடங்கி நடந்துப்பீங்கலாக்கும், மேல சொல்லு.
விளையாடுவோமா புள்ள வில்லாலா
- ஓ.. ஐயம் ரெடி..., என்ன விளையாட்டு?
ஏய்.. மைதானம் தேவையில்ல
- கம்பியூட்டர் கேமா?
அம்ப்பையரும் தேவையில்ல
- அது யாரு? உன் பழைய பாய்பிரண்டா?
யாருக்கும் தோல்வி இல்ல வில்லாலா
-அப்போ எதுக்கு விளையாடனுமாம்?
ஏய் கேளேண்டா மாமு,
-யக்கா சொல்லுக்கா
இது இன்னோரு கேமு
-இன்னும் ஒன்னுக்கூட ஆடல, அதுக்குள்ள இன்னொன்னா
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
-தெரியாம வெள்ளாண்டா நீ ஏமாத்திடுவியே... அசுக்கு புசுக்கு
விளையாட்டு ரூலு, நீ மீறாட்டி ஃபூலு
-இப்போ எவன் ரூல் பிரகாரம் விளையாடுறான்? எல்லாத்திலயும் தான் அரசியல் இருக்கே...
எல்லைகள் தாண்டு அதுதாண்டா கோலு
-எது தாய்லாந்து எல்லையா, இல்ல சிங்கப்பூர் எல்லையா?
டேடி மம்மி, டேடி மம்மி
-எது, அதுக்குள்ள சாவுக்குப் போயிட்டு வந்திட்டாங்களா?
டேடி மம்மி வீட்டில் இல்ல
-ஓ... நல்ல வேளை... அப்புறம்
தடை போட யாரும் இல்ல
-இதையே எத்தன வாட்டி சொல்லுவ?
விளையாடுவோமா புள்ள வில்லாலா
-சரி வா, விளையாடாட்டி இதையேத்தான் கேட்டு கழுத்த அறுப்ப போல...
ஹ்ம்ம்... டேக்சிகாரன் தான் நான் ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல் இளிச்சானே
-சிரிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பேச்ச கொற... பேச்ச கொற...
ஓஹோ பஸ்சில் ஏறித்தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு ஓரம் நின்னானே
-அந்த சீட்டுத்தான் தாராளமா இருக்கும் உன் சைசுக்கு.
ஏய்... அளவான உடம்புக்காரி
-எது நானா?
ஏய்... அளவில்லா கொழுப்புக்காரி...
-ஏய்..!
ஏய்.. அளவான உடம்புக்காரி
-120 கிலோ இருப்பேன், பிரச்சனை இல்லியா?
அளவில்லா கொழுப்புக்காரி
- ரொம்ப புகழ்றீங்க
இருக்குது இருக்குது இருக்குது
வாடி உனக்கு ராத்திரி கச்சேரி
-கச்சேரியில நீ ஜால்றா போடுற கையிதானே?
டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா
-அது சரி, முதல்லேந்து புள்ளன்னு சொல்றியே, யார? என்னமோ போ... நீ தமிழ்லத்தான் பாடுறியான்னு டவுட்டு....
ஏய் வைரம் வியாபாரி என் பல்ல பார்த்தானே
-மாட்டுப் பல்லுன்னு விடைச்சானா?
தன் விற்கும் வைரம் போலி என்று தூக்கி போட்டானே
-அத பாக்கெட்ல போட்டுகிட்டு வந்தியா இல்லியா?
த.. த... த.. த... தங்கம் வியாபாரி என் அங்கம் பார்த்தானே
-தற்கொலை பண்ணி இருப்பானே அப்புறமா?
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழில விட்டானே
-நம்புற மாதிரி ஏதாச்சும் பேசுலா, ப்ளீஸ். அவன் மட்டம்ன்னு சொன்னது உன் அங்கமா இருக்கும்...
ஏய் அழகான சின்ன பாப்பு
ஆ... வைக்காதே எனக்கு ஆப்பு
ஏய் அழகான சின்ன பாப்பு
வைக்காதே எனக்கு ஆப்பு
-இப்படியே பேசிட்டு இரு, வெய்க்கிறேன்டா பெரியா ஆப்பு
கொத்தும் கொலையா இருக்குற உனக்கு
-ஐயயே... தோட்ட வேலை செய்யுறியா?
நான்தான்டி மாப்பு
-உன் விதியே, நான் என்னத்த செய்ய?
டேடி மம்மி, டேடேடி மம்மி
-நோடா செல்லம், டேடிய ‘டேய்’டேடின்னு சொல்லக் கூடாது
டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா
-ஹெலோ, ஹெலோ... ஆர் யூ டேர்? BUZZ... BUZZ... BUZZ...
லில்லுவின் ஐடி ஆப்லைன்னுக்கு மாறியது. வில்லு எல்லா பசங்கள போல புலம்பிக் கொண்டிருக்கிறான்.
அடிப்பாவி கடைசிவரை என்ன விளையாட்டுன்னு சொல்லவே இல்லையே?
இந்த பொண்ணுங்களே இப்படித்தான், குத்துங்க வில்லு குத்துங்க...
பின்குறிப்பு: மேலே பெரிய எழுத்துருவில் இருக்கும் வரிகள் - ஒரு தமிழ்ப்பாடல்.
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இசை ரகம்: அரை விறுவிறுப்பு, குறைந்த பட்சம் தலையை ஆட்டுவிக்கும்.
படம்: வில்லு
பெண்குரல்: திவ்யா
ஆண்குரல்: (தெரியலை)
பாட்டு எழுதியவர்: (தெரியலை)
கருத்துரை: பாட்டின் சரணங்களுக்கு இடையில் வரும் இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.
14 கருத்துகள்:
என்ன கொடுமை சார் இது? இப்படியும் பாடுவாங்களா?
ஆனந்தன், எப்படி இப்படியெல்லாம்??? ரூம் போட்டு யோசிச்சீங்களா? :)
கலக்கல்
து. பவனேஸ்வரி கூறியது...
//என்ன கொடுமை சார் இது?//
இதையே கோடுமைனு சொல்லிட்டா எப்படி? மணிசர்மா இசையில் படிக்காதவன் படத்துல இன்னொரு பாட்டு - ரஞ்சித், சைந்தவி குரலில்... வரிகள் இதவிட கொடுமையா இருக்கு...
//இப்படியும் பாடுவாங்களா?//
பாடிட்டாங்களே... பாடிட்டாங்களே
பிரேம்குமார் கூறியது...
//ஆனந்தன், எப்படி இப்படியெல்லாம்??? ரூம் போட்டு யோசிச்சீங்களா? :)//
இல்லைங்க பிரேம், ரூம் போட்டா செலவாகுமுன்னு ரோட்டோரமே முடிச்சாச்சு
//கலக்கல்//
நன்றி
கருத்துள்ள பாடில்... அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்... அளித்தமைக்கு நன்றி நண்பரே...
அடடா...சத்தியமா இந்தப் பாட்டில வடிவேலு இருந்தா இப்படி தான் கமெண்ட் விட்டிருப்பார்..
VIKNESHWARAN சொன்னது…
//கருத்துள்ள பாடில்... அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்... //
- என்னாடம் கேடிருப்பாங்க... கேடவங்க திட்டியிருப்பாங்க.. ஹிஹிஹி விடுங்க விடுங்க
//அளித்தமைக்கு நன்றி நண்பரே...//
-யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
சுப.நற்குணன் - மலேசியா. கூறியது...
//இனிய அன்பரே வணக்கம்.//
வணக்கம் ஐயா, வருகைக்கு நன்றி
’டொன்’ லீ கூறியது...
//அடடா...சத்தியமா இந்தப் பாட்டில வடிவேலு இருந்தா இப்படி தான் கமெண்ட் விட்டிருப்பார்..//
-அவரு இதைவிட டைமிங்ஙோட கலக்கி இருப்பாருல்ல... வருகைக்கு நன்றி 'டொன்' லீ
விரசம் இல்லாத வரிகள்.. ரசித்து சிரிக்க முடிந்தது..கலக்குங்க..
hahahah ... intha song ivala alaga rasicu irukkingala... ?
//விரசம் இல்லாத வரிகள்.. ரசித்து சிரிக்க முடிந்தது..கலக்குங்க..//
நன்றி கிசோர்... கலக்கிடலாம், ஆப்பை நீங்க ஸ்பான்சரா?
//hahahah ... intha song ivala alaga rasicu irukkingala... ?//
ஹிஹிஹி... இது ரசிக்க என்ன இருக்கு... எல்லாம் பெண்களின் பழகிப்போன பினத்தல்கள்தானே?
அன்பு
நண்பரே,
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா.
கலக்கல்..... வித்தியாசமாகவும் சீண்டலாகவும் இருக்கு...
எப்படிங்க இந்தமாதிரி... ரூம்போட்டு யோசிப்பீங்களோ?
சில இடங்களில் விழுந்து சிரிச்சேனுங்க.... ரொம்ப கலக்கல்....
தொடருங்க....
பாட்டு எப்படியிருந்தாலும் சாட்டிங் சூப்பர்... :)
hmmm
yaarum ippadi yosikke maththange...
good...well done...
u r really very creative in language...
thodarunggal...
கருத்துரையிடுக