நினைவை எட்டிய முதல்நூறு (61-80)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு
பெரும்பாலான சினிமா பாடல்கள் அரைத்த மாவையே அரைத்தாலும், ஒரு சில நேரங்களில் அவற்றில் ஏதாவது ஒன்று நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கின்றன. நாமும் அதை முணுமுணுப்பதில் ஓர் இன்பத்தைக் காண்கிறோம்.
அவ்வண்ணம் நான் களித்தவற்றில் நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இங்கே (நேற்றைய தொடர்ச்சிதான்):
முன்குறிப்பு:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
61. கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்கு மேலே...
62. உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
63. நீ தூரப்பச்சை, என் நெடுநாள் இச்சை
64. விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே, கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
65. என்ன நான் கேட்பேன் தெரியாதா? இன்னமும் என் மனம் புரியாதா?
66. பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா?
67. நானுன்னைக் காணத்தானா யுகம் தோறும் காத்து கிடந்தேனா
68. உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
69. துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறேன் அவள, தனியா எங்கே போனாளோ!
70. என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன...
71. இரவில் காயும் முழுநிலா, எனக்கு மட்டும் சுடும் நிலா...
72. ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்?
73. அமுதென்பதா விஷம் என்பதா இல்லை அமுத விஷமென்பதா
74. அடி பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி கலவி கொள்ளும்... அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும் சுற்றி நின்றாடும் தீ வண்ணம் அணைவது திண்ணம்.
75. தள்ளி தள்ளி நிற்க நான் மழைத் தூறல் இல்லையே, கஷ்டப்பட்டு கற்க நான் கல்லூரி இல்லையே
76. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ, தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்க்காதோ
77. அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே, வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
78. முடிவென்பதே ஆரம்பமே, வலைவில்லாமல் வழி கிடையாதே
79. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி, வெற்றிக்கு அதுவே ஏணியடி
80. பழமை வேறு பழசு வேறு, வேறுபாட்டை தெரிஞ்சிக்கனும்
(எஞ்சியவை இருபது)
6 கருத்துகள்:
ஆனந்தா உன் வலைப்பின்னலில் எல்லோரையும் ஈர்த்துவிடுகிறாய்...
உன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. அப்புறம் நீ, பாடல்களுடன் படங்களின் பெயரையும் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்.
இந்த இருபதில் அனைத்துமே மிக அற்புதமான வரிகளாக அமைந்துவிட்டன. எனக்கும் மிகவும் பிடித்தவை
73 - டூயட் - என் காதலே
74 - தாஜ்மகால் - குளிருது..
முதல்நூறு - திருத்தியமைக்கு நன்றி!
//அப்புறம் நீ, பாடல்களுடன் படங்களின் பெயரையும் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்.//
சென் @ அடுத்தப் பதிவைத் தொடர்ந்து நீங்கள் கேட்டது கிடைக்கும்... ஓகே?
//எனக்கும் மிகவும் பிடித்தவை//
பிரேம் @ அப்போ நமக்கு பிடித்தவை!
’டொன்’ லீ @ மிகச் சரி!
அடுத்த மறுமொழியாளர் உங்களுக்கான சன்மானத்தை வழங்குவார்! :D
சிக்கிமுக்கி @ கண்ணில் பட்ட தவற்றைத் தயங்காம சுட்டியதுக்கு, நான் தானே நன்றி சொல்லனும்... :)
-test-
கருத்துரையிடுக