பக்கங்கள்

வெள்ளி, 23 ஜனவரி, 2009

உளறல் (2)

நீ
பாறையாய் பார்ப்பாரற்று கிடந்தேன்
என்னில் சிற்பம் செதுக்கினாய் நீ


தண்ணீராய்த் தவழ்ந்திருந்தேன்
மின்சாரம் கொணர்ந்தாய் நீ


பஞ்சாய் பறந்துத் திரிந்தேன்
ஆடையாய் நெய்தாய் நீ


சுண்ணாம்பாய் மதிப்பற்று கிடந்தேன்
என்னை முத்தாக்கி மெருகூட்டினாய் நீ


மணிகளாய்ச் சிதறி கிடந்தேன்
மாலையாய்த் தொடுத்தாய் நீ


கரிமம் என்று நகைத்தனர் பலர்
அதில் வைரத்தை ஊற வைத்தாய் நீ


சொற்களாய் மட்டும் இருந்தேன்
கவிதையாய் அடுக்கினாய் நீ


என்னுள் எனைத்
தேட வைத்தாய் நீ


தேடுகிறேன்


என் தேடலின் இறுதி வரை
காத்திருப்பாயா நீ...

14 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

இறைமையை தேடுறிங்களா இல்லை காதலா?

A N A N T H E N சொன்னது…

என் வயசுக்கு ரெண்டுமே ஒன்னுதான்

தமிழ் சொன்னது…

ஒவ்வொரு வரிகளும் அருமை

வாழ்த்துகள்

A N A N T H E N சொன்னது…

திகழ்மிளிர் கூறியது...
முதல் வருகைக்கு நன்றி

//ஒவ்வொரு வரிகளும் அருமை
வாழ்த்துகள்//
-மிக்க நன்றி

ச.பிரேம்குமார் சொன்னது…

//A N A N T H E N கூறியது...
என் வயசுக்கு ரெண்டுமே ஒன்னுதான்
//

கிகிகி... சரியா சொன்னீங்க :)

ச.பிரேம்குமார் சொன்னது…

//என்னுள் எனைத்
தேட வைத்தாய் நீ

தேடுகிறேன்

என் தேடலின் இறுதி வரை
காத்திருப்பாயா நீ...
//

அப்படி தேட வைத்து, தேடும் வரை காத்திருந்து கை பிடிப்பவள் கிடைத்தால் அவனை விட பாக்கியவான் எவனுமில்லை :-)

உங்களுக்கு அப்படி ஒரு தேவதை கிடைச்சாச்சா ஆனந்தன்?

குமரன் மாரிமுத்து சொன்னது…

அருமை ஆனால், தேடலை விரைவுபடுத்தவும்.. சுண்ணாம்புத் தலையாவதற்குள்...

சி தயாளன் சொன்னது…

அருமை..:-)

தேவன் மாயம் சொன்னது…

சொற்களாய் மட்டும் இருந்தேன்
கவிதையாய் அடுக்கினாய் நீ


என்னுள் எனைத்
தேட வைத்தாய் நீ
//

காதல் வரிகளில்
சொட்டுது
தேவா....

பெயரில்லா சொன்னது…

அருமையான் வரிகள்.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

A N A N T H E N சொன்னது…

//உங்களுக்கு அப்படி ஒரு தேவதை கிடைச்சாச்சா ஆனந்தன்?//
பிரேம்... எல்லாம் உளறல்தான்... கிடைச்சா இப்படி கவுஜ பாடி டைம் வேஸ்ட் பண்ணுவேனா? ஹிஹிஹி

//அருமை //
நன்றி குமரன்
//ஆனால்,//
என்ன ஆனால் வேண்டியிருக்கு???
//தேடலை விரைவுபடுத்தவும்..//
ஓ.. அப்படி சொல்ல வரீங்களா?
// சுண்ணாம்புத் தலையாவதற்குள்...//
அது வேற நடக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//அருமை..:-)//
நன்றி டொன் லீ

//காதல் வரிகளில்
சொட்டுது
தேவா....//
நன்றி தேவா.. வருகைக்கு

viji கூறியது...
//அருமையான் வரிகள். //
நன்றிங்க

//தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி//
செஞ்சிட்டா போச்சு, காசா பணமா... நன்றிக்கு நன்றி

geevanathy சொன்னது…

///மணிகளாய்ச் சிதறி கிடந்தேன்
மாலையாய்த் தொடுத்தாய் நீ///

அத்தனை வரிகளும் அருமை வாழ்த்துக்கள்

ஆதவா சொன்னது…

நல்லாயிருக்குங்க....

உளறல்.... நீங்க தண்ணியடிச்சப்ப எழுதினதா??? ஹ்ஹி சும்மா சும்மா...

நல்லா இருக்குங்க.... ஒவ்வொன்றின் வடிவம் மாறும் விதம்....

கடைசியில் அவள் கிடைத்தாலா என்ன???

து. பவனேஸ்வரி சொன்னது…

தேடியது கிடைத்துவிட்டால் அப்பொழுதும் கவிதைப் பாடுவீர்களா? உங்கள் தேடல் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.