பக்கங்கள்

திங்கள், 17 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள்

வினாக்களோடு சில கானாக்கள் (1)* பின்வரும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனை உலகின் பிம்பங்களே. யாரினது மனத்தைப் புண்செய்யும் நோக்கில் இது புனையப் படவில்லை. நன்றி.


ள்ளிரவு நேரம் 12.36. சவரம் செய்துவிட்டு முகத்தில் புது பொழிவு ஏதும் தெரிகிறதா என்ற கேள்வியை நிழற் கண்ணாடியிடம் முன்வைத்தேன். “சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்” என்ற பழமொழி அதற்கு யார் கற்பித்ததோ... என்னிடம் அப்படியே ஒப்புவித்தது. வெறுத்துப் போனேன்.


பக்கத்து அறை நண்பனின் கதவைத் தட்டி அவனிடம் இருக்கும் இன்னொரு தலைக் கவசத்தை நாளைக்குப் பயன்படுத்த அனுமதி கேட்டேன், பிறகு கல்லூரி நூலகத்தில் ஒப்படைக்க வேண்டிய புத்தகத்தையும் அவனிடமே கொடுத்து, சேர்த்து விட சொன்னேன்.
“ஏன் நாளைக்குக் கம்பஸ்க்கு வரலையா?”
“இல்ல, ஒரு விசயமா பட்டர்வொர்த் போறேன்”
“ஹெல்மட் எதுக்கு?”
“வந்து சொல்லுறேன்,” ஒரு திருட்டுப் புன்னகையோடு.
ஏதோ புரிந்துக் கொண்டவனாய், அவன் எனக்கு விளங்காத மொழியில் தலையசைத்துச் சென்றான். நேரம் பின்னிரவு 1.06. கைத்தொலைபேசியில் அலாறத்தை வைத்து விட்டு உறங்க சென்றேன்; இல்லை, முயன்றேன். நடக்குமா நடக்காதா என்றிருந்த தருணம், நாளை நடக்கப் போகிறதே என்ற ஆவலும் குதூகலமும் என் இரவு தூக்கத்தைக் கூறு போட்டன.


அலாறம் அலறியது, என்னை அறியாமலே தூங்கி இருக்கிறேன். நேரம் அதிகாலை 4.30. பாதரசமே உறைந்துப் போயிருக்கும், அப்படி ஒரு குளிர்.
“பச்சைத் தண்ணியில குளிக்கனுமாடா?”
“குளிச்சித்தானே ஆகனும்”
“சரி நேரத்த கடத்தாதே... ஆறு மணிக்கெல்லாம் பட்டர்வொர்த் பஸ் ஸ்டேசன புடிச்சி ஆகனும்”
“முடியலடா” என் சுயத்தோடுதான் இந்த உரையாடல்.


மணி இப்போது காலை 5:40. என் இருப்பிடத்தில் இருந்து பட்டர்வொர்த்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். மூன்று முறை முகம் பார்த்தாகி விட்டது கண்ணாடி முன். ஆம், அதே நையாண்டி பேர்வழியிடம்தான். மோட்டாரை முறுக்கிய வண்ணம் நேரத்திடம் போட்டியிட்டு விரைந்தேன், தெற்கை நோக்கி. இருட்டு, குளிர் என இரண்டும் என்னை விரட்டிக் கொண்டிருக்க “இது நல்லபடியா அமையுமா? என்ன பேசுறது... என்ன சொல்லி வரவேற்பது? அந்த இடத்துக்கு வழி மட்டும் சொன்னால் போதுமா? அல்லது கூட்டிக் கொண்டு போக சொல்வாளா? போகாவிடில் கோவிப்பாளே... என்னை நேரில் பார்த்தால் அவளுக்குப் பிடிக்குமா? பிடித்துப் போய் என்ன பயன்? வரம்பு மீறாமல் பழகனுமே நான், முடியுமா?” இப்படி விடை தெரியா பல கேள்விகளோடு எனது வேட்டை தொடர்ந்தது.

(கனாக்கள் தொடரும்)

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

innoru malaysian blogger :)
kathaiyai seekirama mudichudunga :D
vazhthugal

A N A N T H E N சொன்னது…

//kathaiyai seekirama mudichudunga :D//
இப்பவே கண்ணைக் கட்டுதே! கிகிகிகி

//vazhthugal//
வாழ்த்துக்கு நன்றி

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஆஹா.... தலைவா... சூப்பரு... நளைக்கு அடுத்த பதிவ போடுங்க...

sakthivel சொன்னது…

nalla irukku machi....

but timings.. la...etho.. miss panriyannu.. theriyala... just see it...

bcs.. the time is 5.40.. he has to reach there at 6... it will take 1 hr travel... so... athulla.. than... etho.. miss agura.. mathiri.. irukku

A N A N T H E N சொன்னது…

அதாவது இந்தியன் நேரம் தெரியுமுல்ல? தாமதமா போறது.... மறவன் தான் தான் தாமதமுன்னு நினைச்சி போக, அவள் அதை விட தாமதமா வரா... அதான் அங்க சொல்ல வந்தது... பாருங்களேன், அவன், இடத்தை அடைந்த நேரம் 6.32, 52 நிமிட பயணம்.
8 நிமிசம் முந்திக் கொண்டு வண்டியைச் செலுத்தியதில், அவளைக் காண அவனது ஆவலும் மறைந்து சொல்லப் பட்டிருக்கு...

@ உங்கள் கருத்துக்கு நன்றி, கூர்ந்து கவனித்து வாசித்தமைக்கும் நன்றி நண்பரே