பக்கங்கள்

புதன், 26 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (5)

வினாக்களோடு சில கனாக்கள் (5)



பினாங்கிற்கு மோட்டார் வண்டியில் செல்வதாக முடிவு செய்தோம். இருசக்கர வண்டி என்பதால், பின்னே அமர்ந்து வர தயங்குவாள் என அஞ்சினேன். அவள் அதைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

30 நிமிட பயணம். வழக்கமாக, ரொம்ப நேரம் பயணிப்பது போல தோன்றும். ஆனால், அவள் அருகில் இருந்ததால் என்னவோ நேரம் நொடிகளுக்குள் சுருங்கியது. 30 நிமிடம் என்பது 30 வினாடிகள் போல இருந்தது.
(கவிதை போன்ற பொய்தான்... கண்டுக்காதிங்க)

சாலையில் பேசிக் கொண்டேதான் போனோம். ஒரே ஒரு முறை மட்டும் அவள் என் தோள்பட்டையைப் பற்றிக் கொண்டாள், தற்காப்பு கருதி. முதலில் வித்தியாசமாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது என்று நான் சொன்னதற்குப் பிடிக்கவில்லை என்று பொருட்படாது. ஆயினும், அதை ரசித்து ஏற்க மனம் தயங்கியது. அவள் என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். தற்பெருமை தலைக்கேறியது.
பினாங்கு பால நெடுஞ்சாலையின் மீது அதிகப்படியான கோபம், இவ்வளவு சீக்கிரம் கரையைக் கடக்கச் செய்ததால். அங்கிருந்து அந்த விடுதிக்குச் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. தேடிப் பிடித்து விட்டோம். மையத்தில் பதிவும் செய்தாகிவிட்டது.

“தேர்வு எப்போ?”

“நாளைக்குக் காலையில”

“அது வரைக்கும் என்ன செய்வே? படிக்கனுமோ...”

“படிக்கிறதா? இது ரொம்ப சுலபமான தேர்வுதான், ஏற்கனவே தயார் பண்ணியாச்சு.”

“ஹ்ம்ம்”

“ஏன், நீ பினாங்கைச் சுத்தி காட்ட மாட்டியா?”

“காட்டலாமே, எப்போ?”

பகட்டாக சொல்லிவிட்டேன் - ஏதோ பினாங்கில் எல்லா இடங்களும் பரிட்சயம் போன்று! ஆடிக்கு ஒரு முறை அமாவசைக்கு ஒரு முறை தான் அக்கரைப் பக்கமே எட்டிப் பார்ப்பேன்.

“இப்போ தான்பா… நேரத்தைக் கடத்த வேண்டாமா?”



மோட்டார் பிறகு பர்மா சாலை, தஞ்சோங் பூங்கா சாலை, நீர்வீழ்ச்சி பூங்கா சாலை என சகட்டு மேனிக்கு பறந்துக் கொண்டிருந்தது. “மெதுவா மெதுவா!” அவளது அலறலை நான் கேட்டாலும், வண்டி செவிமடுப்பதாயில்லை.
எனக்குத் தெரிந்த சில இடங்களை அவளுக்குச் சுற்றி காட்டினேன். பள்ளிக் கொண்ட புத்தர் கோவில், நின்று வீற்றிருக்கும் பர்மா பொன்புத்தர் கோவில், பாம்பு கோவில், நீர்வீழ்ச்சி பூங்கா, பினாங்கு பொருட்காட்சி சாலை, ஜெர்ஜாக் வண்டலின் இக்கரை துறைமுகம், பத்து பெர்ரிங்கி கடற்கரை மற்றும் வண்ணத்துப் பூச்சி பூங்கா. ஏனைய இடங்களுக்குச் செல்ல நேரம் ஒத்துழைக்கவில்லை.

ஆம், வண்ணத்துப் பூச்சி பூங்காவில் எனக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியைப் பற்றி இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும்.

(கனாக்கள் தொடரும்)

4 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//அவள் அதைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. //

சந்தோசம் தானே... பிறகு என்னவாம்....

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//ஒரே ஒரு முறை மட்டும் அவள் என் தோள்பட்டையைப் பற்றிக் கொண்டாள், தற்காப்பு கருதி.//

நீ வண்டி ஓட்டுரது சரி இல்லை... ஒரு தடவதான்னு வருத்தப்பட்டா என்ன செய்றது...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//அது வரைக்கும் என்ன செய்வே? படிக்கனுமோ...//

இந்தக் கேள்வியே தப்பால இருக்கு....

A N A N T H E N சொன்னது…

//நீ வண்டி ஓட்டுரது சரி இல்லை... ஒரு தடவதான்னு வருத்தப்பட்டா என்ன செய்றது...//

ஹாஹாஹா, அண்ணனை விட்டுருந்தா தூள் கிளப்பி இருப்பாருல, யேலே மறவ் பைக்க விட்டு கீழே எறங்குலே