பக்கங்கள்

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

உளறல் (1)

கல்


உனைத் தூற்றவே
எடுத்தேன் பேனாவை
உன்மீது சினங்கொள்ள
எனக்கென்ன உரிமையாம்
எழுதாமல் நிற்கிறேன்

அதென்ன உன் மேல்
எனக்கு அப்படியொரு
தீராத் தாகம்
பருகிய அனுபவமே
இல்லை என்றாலும்

இத்தனை முறை நீ
எனை மிதித்தும்
பலமுறை வேண்டாம் போ
என்று ஒதுக்கியும்
தீரவில்லை உன்னோடு
நான் கொண்ட மோகம்

அது மோகமா
அல்லது வயதின் வேகமா
மடப் பயலுக்கு
பகுத்தறிய தெரியவில்லை

சுய மரியாதையாம்
அரைசாண் மமதை
பலமுறை இந்த எண்சாணைக்
கட்டி இருத்தியும்
கால ஓட்டத்தில்
உன் காலடி தேடி
வந்திருக்கிறேன் தன்மானத்தை
அடகு வைத்து
அப்போதெல்லாம் தோன்றவில்லை
ஏன் நான் இப்படி என்று

உன்னோடு உறவாடிய
நாட்களைக் காட்டிலும்
ஊடலில் மூழ்கியதே அதிகம்
அச்சோ... ஊடலா?
காதலே இல்லை என்கிறாய்!

உனை விலகிச் செல்வதாய் எண்ணி
இன்னும் நெருங்கி வந்ததுதான் நிஜம்
தனிமை தருணங்கள் - நீ
பேசிய வார்த்தைகளால் அறைகின்றன
அறைகள் வலிக்காமல் போகுமா?
வலியும் சுகப்படாது எனில்
என்ன காதல்???

இவ்வேளை உணர்கிறேன்
நான் கொண்டது வெறும்
ஒருதலை காதல்தானோ!

காலங் கடந்து வருந்தி
என் செய்வேன்
என் விதி அவ்வளவுதான்
ஆறுதல் கூற
சுயம் உண்டு என்வசம்

சிரிப்பதாய் நினைத்து
கரைந்த காலங்கள் போதும்
கரையா கல் நீ என்று
உணர்ந்தப் பின்னும்

குன்றின் மேல் கல்
அவனை வணங்க
ஆயிரங் கோடி பக்தர்

நீயும் அவதாரம்தானோ என்னவோ
அறியாது அவசரப்பட்டது நான்தானோ
ஆதலால் அவதிக் கொள்கிறேன்





8 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

அனந்தன், நீங்கள் ஆரம்பத்தில் பயன்படுத்திய 'டெம்ப்லட்' எளிமையாகவும் அழகாகவும் இருந்தது உங்கள் கவிதையைப் போல.. :)

A N A N T H E N சொன்னது…

@ சதீசு குமார்

- நன்றி சதீசு
- அதே டேம்ப்லட்-தான், நிறங்கள் மட்டுமே மாற்றம் கண்டுள்ளன...

Unknown சொன்னது…

சுவையான எழுத்துக்கள்.. சிறந்த கற்பனை.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஆனந்தன் கவிதை சூப்பர்...

A N A N T H E N சொன்னது…

//சுவையான எழுத்துக்கள்.. சிறந்த கற்பனை.//
- நன்றி நண்பரே!

//ஆனந்தன் கவிதை சூப்பர்...//
- நன்றி விக்னேசு

Sathis Kumar சொன்னது…

வணக்கம் அனந்தன்,

வலையுலக பக்கம் எட்டிப் பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டனவே, அதான் விசாரித்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்..

பணிச்சுமை அதிகமோ?

உங்களின் அடுத்தப் பதிவு எப்பொழுது?

Sathis Kumar சொன்னது…

அன்பரே,

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.

அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.

http://www.pageflakes.com/Valaipoongaa/

A N A N T H E N சொன்னது…

//உங்களின் அடுத்தப் பதிவு எப்பொழுது?//

வந்தாச்சு :)