காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.
சுடலையின் முதுகில் ஒரு தட்டு தட்டி,
“ஷுடால்... எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்?” என்றாள். .
ஐய்யயோ, இதை யாராவது பார்த்து தொலைத்தால் என்ன ஆவது, முதல்லயே திரும்பி பார்த்திருக்கனும், உனக்கு இது தேவையாடா? சுடலையின் சுயத்தின் முனகல் அது.
“அட ஆமாவா? சத்தத்துல கேட்கலை. அதென்ன ஷுடால், சுடலைன்னு கூட்ப்பிடுங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்?”
“ஷுடால் நல்லாத்தானே இருக்கு, கிளாமரா. இ..இ..இ..இ.. சாப்டாச்சா? எப்படி? நல்லாருக்கா?”
“என்ன கேள்வி இது, இன்னும் உணவு எடுக்கவே இல்லையே”
சுடலை என்ற அழகான பெயரை மாற்றி உச்சரித்த போதே அவனுக்கு மண்டையில் மணி அடித்தாற் போல் இருந்தது. மேற்கொண்டு இப்படி ஏரணமே இல்லாத ஒரு கேள்வி அவளுக்குத் தேவைதானா? சுடலையின் நேர்பதிலுக்கு வலிந்து சிரித்துக் கொண்டாள்.
“ஈ..இ.. ஈ.. இ...”
ஈயாடவில்லை.
“ அனேகமா நல்லாத்தான் இருக்கனும்”
“ எப்படி சொல்றிங்க?”
“ வாசம் மூக்கைத் துளைக்குதே”
“ ஆமாவா, நாய் மாதிரி உங்களுக்கு மோப்ப சக்தி வேற இருக்கோ”
அவள் செய்த ஆசியத்துக்கு அவளைத் தவிர வேறும் யாரும் சிரித்திருக்க வாய்ப்பில்லை. கூடவே ஒரு குண்டையும் போட்டாள்.
“சாப்பிட்டு உடனே கிளம்பிடாதிங்க, ஷுடால்”
“அது ஏன்?”
போச்சுடா, இந்த லூசு வில்லங்கமா ஏதாச்சும் செய்யறதுக்குள்ள, தப்பிச்சிடனும் எனத் தனக்குத் தானெ சொல்லிக் கொண்டான்.
“பத்திரிக்கை பேட்டி இருக்கு, நீங்களும் கலந்துக்கனும்”
“கண்டிப்பா. கலந்துக்கனும்ன்னு ஆசை தான், ஆனால்...”
“ஆனா ஊனான்னா இத ஒன்னு சொல்லிடுவீங்களே, என்ன ஆனா?”.
அப்போது குசுலின் கைப்பேசி அலற, அவள் பரபரப்பாகி விட்டாள்.
“எஸ் குஸ் மீ, வான் மினீட் ஆ...,” என்று அரை குறை ஆங்கிலத்தில் மேற்கத்திய நாகரிகத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.
சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.
(கிசுகிசு தொடரும்)
4 கருத்துகள்:
:))...
நல்லா கதை சொல்றீங்க. இயன்ற அளவில் எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும்.
//சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது//
மறைமுகமாக அழகாகச் சொல்லியிருக்கீங்க... வாழ்த்துக்கள். பாகத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம்.
//எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும்//
எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்ட தயங்க வேண்டாம், திருத்திக் கொள்ள தயாராக உள்ளேன்
//பாகத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம்.//
இந்த முழுக்கதையை ஒருங்கிணைத்தாலே ஒரு சிறுகதையின் நீளம் தான் இருக்கும்... எழுதி முடிக்கல இன்னும், அதனால தவணை முறையில பதிவேற்றம் செய்யுறேன்... உங்க மறுமொழிக்கு நன்றி
VIKNESHWARAN @ நன்றி
கருத்துரையிடுக