பக்கங்கள்

புதன், 31 டிசம்பர், 2008

நினைவை எட்டிய முதற்நூறு (1-20)


நினைவை எட்டிய முதற்நூறு (1-20)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

ரு நாளில் நாம் எத்தனையோ பாடல்களைச் செவியினூடே கேட்கிறோம், ஒரு சில பாடல்கள்தாம் நம்மைக் கவர்கின்றன, ஈர்க்கின்றன;
அப்படி ஈர்ப்பவையில் குறிப்பிட்ட ஓரிரு வரிகளில் நாம் விழுந்துவிடுவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:
முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?
முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில் நினைவு முகம் மறக்கலாமோ?
2. உன் சேல காத்திலாட, என் நெஞ்சும் சேந்தாட
3. உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது... இது கம்பன்
பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது...
4. காதல்?... கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ஹூம்ம்ம் ம்ம்ம்... ம்ம்ம்?... நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவல்லோ...
5. அந்த நிலவை எடுத்து கவரி வீசவா, எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...
6. சகாயமே உன்னருகினில் நிலைப்பெறுவேனே, தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே...
7. அடிவானம் சிவந்தாலும் குடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே
8. அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
9. யாவும் நீயாய் மாறிப் போக நானும் நானில்லையே... மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே... தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்...!
10. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும், விலகிப் போகாதே தொலைந்துப் போவேனே நான்....!
11. என்ன இருந்தப் போதும் அவள் எனதில்லையே... மறந்துப்போ என் மனமே!
12. மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே... மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ...
13. மரபு வேலிக்குள் நீ இருக்க, மறக்க நினைக்கிறேன் முடியவில்லை!!!
14. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை, நெருக்கமே காதல் பாஷை
15. மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன?
16. பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன், கேளாமால் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன்...
17. இழப்பதை இங்கே இன்பம் என்று கொண்டேன், நஷ்டங்களே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான், லயித்து கிடந்தேன் லட்சியத்தை முடித்தான்
18. அழகிய துளி, அதிசய துளி தொட தொட பரவசமே
19. நதியும் குளிக்கின்றதே, நனைய வா என்றதே, பார்த்த இன்பம் பாதி, இன்பம் நனைவேன் நானே
20. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனித்துளி ஆவேனோ
(எஞ்சியவை பின்னாளில்)

6 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

3- ரோஜா - புது வெள்ளை மழை

மற்றவை எதுவும் உடனே ஞாபகம் வரவில்லை..
:-(

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஒரு சில தான் கண்டு பிடிக்க முடியுது... என்ன பாடல்னு போடலாம்மில்லையா...

சிக்கிமுக்கி சொன்னது…

"முதல் நூறு" அல்லது "முதனூறு" என்று எழுதலாம்.

படிக்கப் படாதபாடு படுத்தும் வகையில் ஒரு பிழைவடிவைத் தந்துள்ளீர்களே!

"முதற்நூறு" - என்பதைத்தான் சொல்கிறேன்!

A N A N T H E N சொன்னது…

//"முதல் நூறு" அல்லது "முதனூறு" என்று எழுதலாம்.//

பதிவை ஏற்றம் செய்த பின் நானும் இதைச் சிந்தித்தேன், நன்றி, வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் களைய முயல்கிறேன், நன்றி

A N A N T H E N சொன்னது…

//VIKNESHWARAN said... என்ன பாடல்னு போடலாம்மில்லையா...//
&
//'டொன்' லீ said... மற்றவை எதுவும் உடனே ஞாபகம் வரவில்லை..//

அதுக்கேன்ன BOSS-s, இந்த நூறும் போட்ட பிறகு, அதையும் சொல்லிட்டா போச்சு!

A N A N T H E N சொன்னது…

//'டொன்' லீ said... 3- ரோஜா - புது வெள்ளை மழை//

உந்தன் காதோடு யார் சொன்னது... கரீக்ட்டா சொல்லிட்டிங்க