பக்கங்கள்

வியாழன், 1 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (21-40)


நினைவை எட்டிய முதல்நூறு (21-40)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு


பாடல் அல்லது இசை கேட்பதே ஓர் அலாதி இன்பம்தான், இல்லையா? ஒரு சிலர் இசை கேட்பதையே ஒரு பொழுது போக்காய் வைத்துள்ளனர்.


வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது நண்பரின் கைப்பேசியிலோ ஒலித்த இசையை உள்வாங்குகிறோம், பின் நம்மை அறியாமலே அதை முணுமுணுக்க செய்கிறோம்.

ஒரு முழுப்பாடலில், ஏதோ ஒரு கட்டத்தை நாம் ஆழமாக ரசித்து விடுகிறோம். அதற்கு காரணம், அந்த குறிப்பிட்ட வரியின் மொழியாளுமையா? இசையின் கவர்ச்சியா? பாடகரின் குரல் ஈர்ப்பா? அல்லது காட்சியின் வசீகரமா? எதுவாயினும் அவ்வரிகளில் நாம் வீழ்ந்ததை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்?

அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,

சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இதோ:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21. நான் என்றால் நானில்லை நீதானே நானாயானேன், நீ அழுதால் நான் துடிப்பேன்

22. உந்தன் பார்வை எந்தன் மீது விழ ஏதோ நானும் காத்திருந்தேன், வெளியே சொன்னால் ரகசியமா? என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே!

23. விழிகளின் அருகினில் வானம், வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம்... இது முதல் முதல் அனுபவமோ?

24. உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரும் தூரம் தெரியாது, உன்னில் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது.

25. சட்டென்று மாறுது வானிலை, பெண்ணே உன் மேல் பிழை

26. சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் எழுதும் எதுவும் கவிதையாக மாறும்

27. என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.

28. வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...

29. வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

30. நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு, உனக்காகக் காத்திருப்பேன், உயிரோடு பார்த்திருப்பேன்...

31. மெய்யாக நீ என்னை விரும்பாதப் போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்... நிஜம் உந்தன் காதல் என்றால்!

32. கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்... கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன், உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே

33. பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய், நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

34. இறுதிச் சடங்கில் மிதிகள்படும் பூவைப் போல் கசங்கிவிட்டேன்

35. தாத்தா ஓட்டிய குதிரை இன்று வேலைக்காகாது

36. விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது, விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி துலையாது...

37. இன்னுங் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து, மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து...

38. சாமி தவித்தான், தாயைப் படைத்தான் உன் காலடி மட்டும் தருவாய் தாயே, சொர்க்கம் என்பது பொய்யே

39. தாயழுதாளே நீ வர, நீயழுதாயே தாய் வர

40. நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

(எஞ்சியவை பின்னாளில்)

4 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

23 - அழகிய தீயே
25 - வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள்
31 - காதல் தேசம் - அன்பே
40 - பாண்டவர் பூமி - அவரவர்..

kuma36 சொன்னது…

//கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்... கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன், உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே//

//நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்//
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் சொன்னது…

நிறைய நல்ல வரிகளை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் ஆனந்தன் :)

A N A N T H E N சொன்னது…

’டொன்’ லீ @ சரியா சொல்லிட்டீங்க...

கலை - இராகலை @ வருகைக்கு நன்றி

//நிறைய நல்ல வரிகளை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் ஆனந்தன் :)//
சேவைன்னு வந்துட்டா இதெல்லாம் சுட்டிக்காட்டாமலா? :D நன்றி