இந்த தாகம் பெருசு!
தாகத்துக்குத் தண்ணி குடிக்கிறோமா? இல்ல சுகத்துக்காக குடிக்கிறோமா? இப்படி ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போலுக்கு... ஏன்ன்னு கேக்குறிங்களா? படையே நடுங்கும்ன்னு சொன்னாங்க பாம்ப பத்தி. இங்க பாம்பையே படியெடுத்து உறிஞ்சி குடிக்கிறாங்க... திடமான மனம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்...
பாம்பு வைன் என்பது ஒருவகை மதுபானம். ஒரு கண்ணாடி குடுவைக்குள் விஷம் பொருந்திய ஒரு முழு பாம்பு அடைக்கப்படுகிறது. இதுவகை பானம் வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்டு தென்கிழக்காசிய பல இடங்களில் கிடைக்கப் பெறுகிறது. பாம்புகள், குறிப்பாக விஷம் பொருந்தியவை, பெரும்பாலும், இறைச்சிக்காக பதம் செய்யப்படுவதில்லை. அவற்றின் விஷத்தை மதுபானத்தில் சேர்ப்பிக்கவே அவை பதப்படுத்தப் படுகின்றன. இருப்பினும், பாம்பின் விஷமானது புரதம் கொண்டிருப்பதால், அவை விரிக்கப்பட்டு (unfolded) செயல் இழந்து கிளாவு இழி (inactivate) நிலை அடைகின்றன. இதற்கு காரணம் எதனோலினால் (ethanol) ஏற்படும் இயற்கை நீக்கத்தின் (denaturation) தாக்கமாகும்.

ஒரு பெரிய விஷப்பாம்பை ஒரு சுண்டக் கஞ்சிக்கான கண்ணாடி ஜாடியில் புகுத்துகின்றனர். பெரும்பாலும் அதனோடு சிறுவகை பாம்புகளும், ஆமைகளும், பூச்சிகளும், பறவைகளும் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப் படுகின்றன. இவ்வகை வைன்கள், நலம் ஊக்கி அல்லது உற்சாக பானமாக சிற்றளவில் பருகப் படுகின்றன.



பாம்பின் உடல் திரவங்கள் வைனில் கலக்கப்பட்டு, அது உடனேயே சிற்றளவில் பருகப்படுகிறது. பாம்பின் குருதி-வைன் எப்படி தயாரிக்கப் படுகிறது? பாம்பின் தசைப் புடைப்புகள் அரியப்பட்டு, அதிலிருந்து வழியும் குருதி சேகரிக்கப் படுகிறது. பிறகு அதைத் தூய எதனாலோடு அல்லது சோற்று வைனோடு (சுண்டக்கஞ்சி???) சேர்த்து கலவைக் கிடங்கில் கலக்கப்படுகிறது. இதே செய்முறையில் பாம்பின் பித்தப் பையிலுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம்தான் பாம்பு பித்தநீர் வைன். பாம்பின் இறைச்சி, கல்லீரல், மற்றும் தோளால் ஆன உணவுப் பண்டங்கள் இந்த பானத்தோடு சேர்த்து உண்ணப் படுகின்றன.


(வெள்ளைக்கார பெருசு, குடிச்சிட்டு உசுரோட இருந்தியா?)
மேற்கண்ட செய்தி உண்மையா பொய்யான்னு என்னைக் கேட்காதிங்க... பன்னனுப்பி மடல்ல எனக்கு வந்திச்சு, இங்கே போட்டேன்... அவ்வளவுதான்
மொழியில குத்தம் குறை இருந்தா, கீழே மறுமொழியிட்டு குமுறுங்க...
23 கருத்துகள்:
அய்யோ..அய்யோ...
ஊரில் காய்ச்சும் கள்ளச்சாரயங்களில் தேள்.., மற்றும் சில ஐட்டங்கள் கலக்கப்படுவதாக மருத்துவ பீட அண்ணா ஒருவர் தெரிவித்து இப்ப ஞாபகம் வருது...
வாருங்க 'டொன்' லி, வேலை முடிஞ்சிருச்சா?
//கள்ளச்சாரயங்களில் தேள்.., மற்றும் சில ஐட்டங்கள் கலக்கப்படுவதாக மருத்துவ பீட அண்ணா ஒருவர் தெரிவித்து இப்ப ஞாபகம் வருது...//
ஓ... டேஸ்ட்டா இருக்குமா?
oh my god.. so scary to see the pictures..
ipadi koode nadakutanga ulagathule.. snake kuda vithu vekkalaiya intha manusa paya pullainga..
Ananthen, so u have taste it?
hey, intha wine kudica enna benefit ??
//hey, intha wine kudica enna benefit ??//
நிறைய இருக்கு, ஒன்னு சொல்றேன்
வீட்டுக்கு வந்த விருந்தாளிய இத கொடுத்து எளிதா விரட்டலாம்
//Ananthen, so u have taste it?//
விஜி, விளக்கமா சொல்றேன், கவனமா கேளுங்க...
குடிக்கிறவன் குடிக்காம இருக்க மாட்டான், குடிக்காம இருக்கிறவன் குடிக்க மாட்டான் (உபயம்: முத்து)
எனக்கு Vomit வருது. எப்படியெல்லாம் போதை ஏத்துறாய்ங்கன்னு பாருங்களேன்!
நமக்கெல்லாம் ஒரு கட்டிங், விஸ்கியோ, பிராந்தியோ... ஆனா இது மட்டும் நோ!
Nan ungala pathi ketenga. POTHU KARUTUKKAL EETRU KOLLAPPADATHU
//ஓ... டேஸ்ட்டா இருக்குமா?//
யோவ்..இதயெல்லாம் மனுசன் குடிப்பானா...? உவ்வே...
நான் பனங்கள்ளு மட்டும் தான் குடிப்பேனாக்கும்...
அய்யே... இதென்ன விஷப் பரிட்சை? எதையுமே இந்த மனுச சென்மம் விட்டு வைப்பதில்லையே.. எனக்கும் ராம்சுரேஷ் அண்ணா போல் Vomit Vomit -டாக வருது.
உங்கள் பதிவில் சில புதிய தமிழ்ச் சொற்களை கற்றுக் கொண்டேன்.
நன்றி அனந்தன்..
சீ...சீ...பாக்கவே அருவருக்குது.பயம்...மாவும் இருக்கு.எப்பிடித்தான் குடிப்பீங்களோ...!
யோவ் இது என்னய்யா கொடுமை...
இன்னும் கொஞ்ச நாள்ல மனுச வைன் கூட வந்திடும் போல....
ராம்சுரேஷ் கூறியது...
// ஆனா இது மட்டும் நோ!//
அண்ணா, களவும் கற்று மற
viji கூறியது...
//Nan ungala pathi ketenga. POTHU KARUTUKKAL EETRU KOLLAPPADATHU//
அட ஆமாவா? பொதுவா மெதுவா சாதுவா தோதுவா சொன்னா... அது எப்படி சொல்றது... சொன்னாலும் புரியுமா? புரிஞ்சாலும் ஏற்குமா? ஏற்றாலும் நம்ப முடியுமா? நம்பினாலும்.... சமுதாயம் என்ன்ன சொல்லும்.... வேண்டாங்க விட்டுருங்க
’டொன்’ லீ கூறியது...
//நான் பனங்கள்ளு மட்டும் தான் குடிப்பேனாக்கும்...//
சிங்கையில கிடைக்குதா கள்ளு?
குமரன் மாரிமுத்து கூறியது...
//அய்யே... இதென்ன விஷப் பரிட்சை?//
விஷப் பரீட்சை இல்ல அண்ணே... விஷ போதை...
சதீசு குமார் கூறியது...
//உங்கள் பதிவில் சில புதிய தமிழ்ச் சொற்களை கற்றுக் கொண்டேன்.//
எல்லாம் விக்ச்னரியின் (விக்கிப்பீடியாவின் தமிழ் அகராதி) மகிமை... மொழி மாற்றும்போது மண்டையை நிறைய தூசு தட்ட வேண்டி இருந்தது... ஒரு கட்டத்துல ஏண்டா இந்த வேண்டாத வேலைன்னுக்கூட தோணுச்சு....
//நன்றி அனந்தன்..//
வாருங்கள், இதை wikiக்குச் சேர்ந்து சொல்லுவோம்
ஹேமா கூறியது...
//எப்பிடித்தான் குடிப்பீங்களோ...!//
இப்படி கேட்பீங்கன்னு ஏற்கனவே தெரிஞ்சித்தான்... வெள்ளைக்கார பெருசு குடிக்கிற போட்டோவ போட்டோம்... அப்புறமும் எப்படி குடிப்பிங்கன்னு கேட்டா? :D வருகைக்கு நன்றி ஹேமா.
VIKNESHWARAN கூறியது...
//இன்னும் கொஞ்ச நாள்ல மனுச வைன் கூட வந்திடும் போல....//
நாம செய்வோம்... ரெடியா?
ellam puriyum.. MOTALLA COLLUNGA... :D
அன்பு நண்பரே,
வணக்கம்!
இன்று வலச்சரத்தில்
உங்களைப்ப்ற்றி
எழுத உள்ளேன்.
வந்து பின்னூட்டத்தில்
கலந்து கொள்ளவும்
தேவா.
நீங்க டேஸ்ட் பண்ணிப் பார்த்தீங்களா பாஸ்?
உவ்வே!!!! நம்மாளுங்க ஆராய்ச்சிக்கு விவஸ்தையே இல்லீங்க...
பாம்பு கறி கேள்விப்பட்டிருக்கிறேன்.., இது என்னடான்னாக்கா பாம்பு ஒயினா இருக்கக...!!!!
மறுபடியும்
உவ்வேஎ
உவ்வே!!!! நம்மாளுங்க ஆராய்ச்சிக்கு விவஸ்தையே இல்லீங்க...
பாம்பு கறி கேள்விப்பட்டிருக்கிறேன்.., இது என்னடான்னாக்கா பாம்பு ஒயினா இருக்கக...!!!!
மறுபடியும்
உவ்வேஎ
////
அவை விரிக்கப்பட்டு (unfolded) செயல் இழந்து கிளாவு இழி (inactivate) நிலை அடைகின்றன. இதற்கு காரணம் எதனோலினால் (ethanol) ஏற்படும் இயற்கை நீக்கத்தின் (denaturation) தாக்கமாகும்.
///
நல்ல தமிழாக்கம்
அப்புறம் இதை படிக்கவே கொமட்டுதே
எப்படி குடிபாய்க?!!?!!?!!!
கலி.. முத்திடுச்சு!
பாம்பென்றால் படை நடுங்கும் என்பது போய்.. மனிதர்களைக் கண்டால் பாம்பு நடுங்கும் காலம் வந்து விட்டது! வாழ்க வையகம்!
உண்மைதான் சகா.. இத பத்தியும் இன்னொரு முக்கியமான் மேட்டரை எழுதினத படிக்கலையா? அத கேட்டா ஹார்ட் அட்டாக்கே வந்துடும்.. மனச கல்லாக்கிட்டு படிங்க
http://www.karkibava.com/2009/01/blog-post_06.html
என்னக் கருமம் சாமி இது! பார்க்கவே முடியல இத எப்படித்தான் குடிக்கிறாங்களோ...
கருத்துரையிடுக