"20 நிமிசமாவது எடுக்குமே அங்கிருந்து. "
"பார்க்கலாம், யார் சொல்றது நடக்குதுன்னு. "
"மறவ், கோவப் படாத. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்"
"கோவம்லாம் இல்ல, பத்திரமா வா அது போதும். " மிகவும் செயற்கையாக.
அதன் பிறகு படிக்க முடிந்திருக்குமா? தாட்களை எல்லாம் பையினுள்ளே போட்டு விட்டு, மீண்டும் பேருந்து நிற்கும் இடத்தை நோக்கினேன். இப்போது அலை அலையாய் மக்கள் கூட்டம். உச்சி வானில் கதிரவன் பற்களைக் காட்டி இழித்துக் கொண்டு. அங்கும் இங்கும் நடந்து கால்கள் அசந்து போயின. 15 நிமிடங்கள் கழித்து பேருந்து வந்தது. உடனே சென்று அவளை வரவேற்கவில்லை. தூரத்தில் இருந்தே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒல்லியாக ஒருத்தி இறங்கினாள்; மார்கழி தென்றல் என்னை வருடியதாய் கனா. முதுகில் ஒரு துணி மூட்டை. அட, அவளேதான். அவளுக்கு என்னை சரியாக அடையாளம் தெரியாது என்ற நம்பிக்கையில், வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டே இருந்தேன், நேரே வந்து "ஹாய், எப்படி இருக்கே?" என் பெயரையும் குறிப்பிட்டாள். ஹ்ம்ம்... தெளிவாகத்தான்யா இருக்கா. மறு புன்முறுவலிட்டு வரவேற்றேன்.
என்னைவிட மூன்று செண்டிமீட்டர் குள்ளம்; அவளது இரு புருவங்களை வகுத்து நின்றது - மயிர் நுணியளவு நுண்ணிய பொட்டு ஒன்று. கொண்டையை விட்டு பிரிந்து காதருகே நடனமாடிய அடங்காத கூந்தல் குழல். அவள் அணிந்திருந்த இருக்கமான முழுக்கை மேற்சட்டை. அதை ஒரு பாதியாக மறைத்து கொண்ட குளிராடை. சிம்ரனிடம் வாடகை வாங்கிய ஜீன்ஸ் காற்சட்டை. அணிந்திருந்த ஆடை அவளது நவ நாகரிகத்தைக் கதை கதையாய் சொன்னாலும், கண் சுளிக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை. நிசமாகத்தான். அப்படியே இருந்திருந்தாலும் அதை குற்றம் சொல்லும் அளவுக்கு நான் நல்லவனும் அல்லன்.
சிரிக்கும்போது முந்தி நிற்கும் முயல் பற்கள் இரண்டு, அவற்றையும் போட்டி போட்டுக் கொண்டு வெளியே தள்ளி நின்றது – அவள் பொறுத்தி இருந்த பல் வரிசையை நெறிப்படுத்தும் கம்பி. இப்போது அவளது மெல்லிய, சிவந்த அதரங்கள் விரிந்து அசைகின்றன.
"ரொம்ப வெயிட் பண்ணிட்டல்ல?" சிங்கையில் சிலைகள் பேசுமா? இல்லை இல்லை, இது என் தோழி எழில்விழி. சுய நினைவுக்கு வந்துவிட்டேன்.
"ஊகூம். ஹவ் வாஸ் தெ ஜெர்னி?" (இல்லை, பயணம் எவ்வாறு அமையப் பெற்றது?)
"ஒரே குளிர். "
"திரும்பி போறதுக்கு டிக்கெட் எடுத்திடலாமா? இல்ல முதல்ல பசியாற போறியா?"
"இங்க பக்கத்துல வாஷ் ரூம் எங்கே இருக்கும்? "
போகும் வழியில் என் பின்னே வாகனம் வர, "ஏய், காடி வருது, பாத்து பாத்து” என அவள் சிறுகூச்சலிட்டது என் மேல் உள்ள அக்கறையைக் காட்டியது. நான் மெய் சிலிர்த்துப் போனேன். திரும்பிச் செல்ல பயணச்சீட்டு வாங்கியாகி விட்டது, அவள் பசியாற்றி விட்டாள். சரியாகத் தூங்காததால், எனக்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. அவள் போக வேண்டிய தேர்வு மையமோ பினாங்கு தீவில் உள்ளது.
“சரி அப்புறம், உன்னை பஸ்ல இல்லாட்டி பெர்ரில ஏத்தி விட்டுட்டு கிளம்பட்டா?” நான் கேட்டேன்.
“ஏன்பா நீ வரலையா?”
“நான் எதுக்கு, விழி?”
“நீதான் இன்னிக்கி ப்ளான் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டீயே, வந்து அந்த விடுதி வரைக்கும் விட்டுட்டு போய்டு”
“தூக்கம் தூக்கமா வருதுலா”
"புது இடம், பயமா இருக்கு. மலாய் வேற சரியா பேச வராது”
கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து நிறைய பேசினோம். நான் பேசுவதைப் பொறுக்க முடியாத நல்லவள் போல
“சனியனே, காலங் காத்தாலயேவா”
“அப்படி சொல்லக்கூடாது,” நான்.
(கனாக்கள் தொடரும்)
எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியாமல் விழுந்த சில வேற்றுமொழி சொற்களுக்கான - தமிழாக்கம் கீழே:
டிரைவர் – ஓட்டுனர்
7 கருத்துகள்:
//சிம்ரனிடம் வாடகை வாங்கிய ஜீன்ஸ் காற்சட்டை. //
ரொம்பவும் ஏழைபட்ட ஃபேமிலியோ?
//கண் சுளிக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை.//
ரொம்ப வருத்தம் போல...
//நான் மெய் சிலிர்த்துப் போனேன். //
மலேரியா காய்ச்சலோ?
//ரொம்பவும் ஏழைபட்ட ஃபேமிலியோ?//
- ஹா ஹா... அட அப்படித்தான் போல, மறவன் மூக்கைப் பிடிச்சிகிட்டுத்தான் கை குலுக்கி இருக்க வேணும்...
//மலேரியா காய்ச்சலோ?//
- வயித்தெரிச்சலோ.. மறவன் மேல :D
//ஹா ஹா... அட அப்படித்தான் போல, மறவன் மூக்கைப் பிடிச்சிகிட்டுத்தான் கை குலுக்கி இருக்க வேணும்...//
அட இங்க பாருடா பக்கத்துல நின்னு பார்த்த மாதிரி பதில் சொல்றத...
// பக்கத்துல நின்னு பார்த்த மாதிரி பதில் சொல்றத...//
ஓர் அனுமானத்துல சொன்னது... ('இருக்க வேணும்'ன்னு தானே எழுதி இருக்கேன்... எஸ்கேப்பு)
கருத்துரையிடுக